வெறும் ஒரு நிமிடம் மட்டுமே பயணம் செய்யும் விமானம்.., எங்கு தெரியுமா?
உலகில் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, நீர் வழி போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து உள்ளிட்ட போக்குவரத்துகள் உள்ளன.
அதில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரத்தை, சில மணி நேரங்களில் கடக்கும் திறன் விமானங்களுக்கு மட்டுமே இருக்கிறது.
ஆனால், தற்போது வெறும் 1 நிமிடம் முதல் 1.5 நிமிடத்தில் பயணம் செய்யும் வகையில் விமான பயணம் வந்திருக்கிறது.
ஸ்காட்லாந்தில் உள்ள வெஸ்ட்ரே மற்றும் பாப்பா வெஸ்ட்ரே ஆகிய இரு தீவுகளுக்கு இடையே இயக்கப்படும் விமானம்தான் உலகின் மிக குறுகிய நேரத்தில் பயணிக்கும் விமானம்.
இந்த இரு தீவுகளுக்கும் இடையேயான தூரம் என்பது 1.7 மைல் அதாவது 2.7 கிலோமீட்டர்.
அந்த இரு தீவுகளுக்கு இடையே பாலம் ஏதும் அமைக்கவில்லை. அதுமட்டுமின்றி நீர் வழி போக்குவரத்தை மேற்கொள்ளவும் முடியாத வகையில் அந்த பகுதியில் அதிகளவில் பாறைகள் உள்ளன.
முக்கியமாக மாணவர்களும், ஆசிரியர்களும் பாப்பா வெஸ்ட்ரேயில் உள்ள 60 தொல்பொருள் இடங்களை ஆய்வு செய்வதற்காக இந்தப் பாதையில் பயணிக்கின்றனர்.
பாப்பா வெஸ்ட்ரேயில் வசிப்பவர்களில் 90 பேரின் உதவிக்கு விரைந்து செல்ல வேண்டி மருத்துவர்கள் இந்த வழியை பெரும்பாலும் பயணிக்கின்றனர்.
இது தவிர சுற்றுலா பயணிகளிடையேயும் இந்த பயணம் பிரபலமாகியுள்ளது. இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 8 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |