Snapdragon 870 5G புரோசசருடன் அறிமுகமாகும் உலகின் முதலாவது கைப்பேசி
ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைபப்பில் தற்போது புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
அதுமாத்திரமன்றி அவற்றின் வினைத்திறன்களும் வெகுவாக மெருகூட்டப்பட்டுவருகின்றன.
இந்த வரிசையில் தற்போது Snapdragon 870 5G வகை புரோசசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ் வகை புரோசசருடன் அறிமுகமாகும் உலகின் முதலாவது ஸ்மார்ட் கைப்பேசி என் பெருமையை Motorola Edge S ஸ்மார்ட் கைப்பேசி பெறுகின்றது.
இக் கைப்பேசியானது 6.7 அங்குல அளவு, 2520 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் Snapdragon 870 5G புரோசசர், பிரதான நினைவகமாக 8GB LPPDDR5 RAM மற்றும் 256GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.
மேலும் 64 மெகாபிக்சல்கள், 16 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராக்களையும், 16 மெகாபிக்சல்கள் மற்றும் 8 மெகாபிக்சல்களை உடைய இரு செல்ஃபி கமெராக்களையும் கொண்டுள்ளது.
இதன் விலையானது அண்ணளவாக இந்திய பெறுமதியில் 22,500 ரூபாய்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.