கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்த நோயால் அதிகம் பாதிப்பு ஏற்படும்... கனேடிய நிபுணர்கள் எச்சரிக்கை
கனடாவில், கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ப்ளூ காய்ச்சலின் பாதிப்பு அதிகம் இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டு, பிள்ளைகள் பள்ளிக்கும், பெரியவர்கள் அலுவலகங்களுக்கும் செல்லத் தொடங்கிவிட்ட நிலையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ப்ளூ காய்ச்சலின் பாதிப்பு அதிகம் இருக்கும் என்கிறார் குழந்தைகள் நல மருத்துவரும், மருத்துவத்துறை நிபுணருமான Dr. Ran Goldman.
ஆகவே, ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார். தடுப்பூசி ப்ளூ காய்ச்சல் அபாயத்தை முற்றிலும் தடுக்காது என்றாலும், மக்கள் மோசமாக சுகவீனம் அடைவதை அது தடுக்கும்.
இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதாரத்துறை அதிகாரிகள், பிறந்து ஆறு மாதங்கள் ஆன குழந்தைகளிலிருந்து அனைவருக்கும் ப்ளூ தடுப்பூசி இலவசம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.