டி20 தரவரிசையில் கெத்து காட்டும் இலங்கை வீரர்கள்
இலங்கையின் வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷணா டி20 தரவரிசையில் டாப் 3 இடத்தை பிடித்துள்ளனர்.
தரவரிசைப் பட்டியல்
ஐசிசி டி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. பந்துவீச்சாளர்களுக்கான Top 10 பட்டியலில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களான வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷணா இருவரும் நல்ல முன்னேற்றங்களை அடைந்துள்ளனர்.
@X.com
அதாவது 680 புள்ளிகளை பெற்றுள்ள ஹசரங்கா ஒரு இடம் முன்னேறி 3வது இடத்தையும், அதே புள்ளிகளை பெற்றிருப்பதால் தீக்ஷணா 2 இடங்கள் முன்னேறி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தீக்ஷணா
அதேபோல் ஒருநாள் தரவரிசையில் தீக்ஷணா (648 புள்ளிகள்) மூன்று இடங்கள் முன்னேறி 8வது இடத்தை பிடித்துள்ளார்.
ANI
ஆனால் ஆல்ரவுண்டர் பட்டியலில் ஹசரங்கா 7வது இடத்தில் (175 புள்ளிகள்) நீடிக்கிறார்.
ஐசிசி தரவரிசைப்பட்டியலில் அடில் ரஷீத் (டி20), கேஷவ் மஹாராஜ் (ஒருநாள்) மற்றும் ஷாகிப் அல் ஹசன் (டி20 ஆல்ரவுண்டர்) ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |