இலங்கை திரும்ப வேண்டிய நிலையில் தோனி என்னை கட்டிப்பிடித்து கூறிய விடயம்! தீக்ஷணா பகிர்ந்த உரையாடல்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தன்னை கட்டியணைத்து, அடுத்த முறை பந்துவீச்சு கிடையாது என்று என்னிடம் கூறினார் என இலங்கையின் தீக்ஷணா தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷணா ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
BCCI
அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 22 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 4/33 ஆகும்.
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்குகிறது. தோனிக்கு இது கடைசி தொடர் என்ற கருத்து நிலவுவதால், இந்த தொடருக்கு கடும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் தமது அணியின் கேப்டன் தோனியுடன் நடந்த உரையாடலை தீக்ஷணா பகிர்ந்துள்ளார்.
அதில், ''கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டி வெற்றிக்கு பிறகு, நானும் பத்திரனாவும் உடனடியாக இலங்கை திரும்ப வேண்டியிருந்தது. இறுதிப்போட்டிக்குப் பிறகு CSK தரப்பில் விருந்து வைக்கப்பட்டது. அதில் இருந்து நாங்கள் விடைபெற இருந்தபோது கேப்டன் தோனியை சந்திக்க சென்றோம். அப்போது அவர் என்னை கட்டியணைத்து அடுத்த முறை உனக்கு பந்துவீச்சு கிடையாது, பேட்டிங் மற்றும் பீல்டிங் மட்டுமே என கூறினார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மஹீஷ் தீக்ஷணா 38 ஒருநாள் போட்டிகளில் 55 விக்கெட்டுகளும், 41 டி20 போட்டிகளில் 40 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
iplt20.com
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |