அதிரடி காட்டிய ஜிம்பாப்பேவை 208 ரன்னில் சுருட்டிய இலங்கை அணி! 20வது அரைசதம் அடித்த கேப்டன்
ஜிம்பாப்பே அணி நிர்ணயித்த 209 ஓட்டங்கள் இலக்கை நோக்கி இலங்கை அணி ஆடி வருகிறது.
முதல் ஓவரில் விக்கெட்
இலங்கை - ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்பே முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே ஜிம்பாப்பே அணிக்கு மதுஷன்கா அதிர்ச்சி கொடுத்தார்.
அவரது பந்துவீச்சில் Tinashe டக்அவுட் ஆனார். அடுத்து நிதானமாக ஆடிய கும்பியே 30 ஓட்டங்கள் எடுத்து தீக்ஷணா ஓவரில் அவுட் ஆனார்.
@ZimCricketv (twitter)
கேப்டனின் அரைசதம்
அடுத்து வந்த வீரர்கள் தீக்ஷணா பந்துவீச்சில் நடையைக் கட்டினர். எனினும் கேப்டன் கிரேக் எர்வின் அரைசதம் விளாசினார்.
FIFTY! ODI half-century number 2⃣0⃣ for the captain Craig Ervine ?#SLvZI pic.twitter.com/bzsK9Ugj4A
— Zimbabwe Cricket (@ZimCricketv) January 8, 2024
அவர் 102 பந்துகளில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 82 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது சமீரா ஓவரில் ஆட்டமிழந்தார். இது அவரது 20வது அரைசதம் ஆகும்.
பின்னர் Burl 31 (37) ஓட்டங்களில் சமீரா ஓவரில் போல்டு ஆனார். இறுதியில் ஜிம்பாப்பே அணி 44.4 ஓவரில் 208 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இலங்கை தரப்பில் தீக்ஷணா 4 விக்கெட்டுகளும், வாண்டர்சே மற்றும் சமீரா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
@ZimCricketv (twitter)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |