பந்துவீசியவுடன் பாய்ந்து ஒற்றை கையால் கேட்ச்! மிரட்டிய இலங்கை வீரரின் வீடியோ
அஷென் பண்டார 30 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றார்
அசித பெர்னாண்டோ 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்
இலங்கை லீக் தொடரில் மஹீஸ் தீக்ஷனா எதிரணி வீரரை அபாரமாக கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க செய்தார்.
இலங்கை டி20 லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் எஸ்.எல்.சி ரெட்ஸ் மற்றும் எஸ்.எல்.சி ப்ளூஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
எஸ்.எல்.சி ப்ளூஸ் தனது முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்கள் எடுத்துள்ளது. எஸ்.எல்.சி ரெட்ஸ் அணி வீரர் மஹீஸ் தீக்ஷனா அபாரமாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சதீர சமரவிக்ரமாவுக்கு பந்துவீசிய தீக்ஷனா, அவர் அடித்த பந்தை பாய்ந்து சென்று ஒற்றை கையால் பிடித்து அசத்தினார். இதனால் சதீர சமரவிக்ரமா 10 ஓட்டங்களில் வெளியேறினார்.
BEAUTY! Maheesh Theekshana takes an outstanding catch to dismiss Sadeera Samarawickrama 😎
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) August 15, 2022
🔴 LIVE | https://t.co/mmiXT5hF75 #SLCT20League pic.twitter.com/qWGzZkgC9n