தட்டித்தூக்கிய தீக்ஷணா, வாண்டர்சே! மொத்தமாக சுருண்ட நியூசிலாந்து
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 209 ஓட்டங்களுக்கு சுருண்டது.
சரிந்த விக்கெட்டுகள்
பல்லேகேலேவில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டிம் ராபின்சன் 4 ஓட்டங்களில் வெல்லாலகே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து தீக்ஷணா பந்துவீச்சில் நிக்கோலஸ் (8), வாண்டர்சே பந்துவீச்சில் வில் யங் (26) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
மார்க் சாப்மேன் அரைசதம்
எனினும் மார்க் சாப்மேன் (Mark Chapman) மற்றும் மிட்ச் ஹே கூட்டணி ஓரளவு அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
அரைசதம் விளாசிய சாப்மேன் 81 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மிட்ச் ஹே (Mitch Hay) மட்டும் நின்று ஆட, ஏனைய வீரர்கள் வாண்டர்சே மற்றும் தீக்ஷணாவின் சுழலில் வீழ்ந்தனர்.
கடைசி விக்கெட்டாக ஹே 49 ஓட்டங்களில் அவுட் ஆக, நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 209 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஜெப்ரி வாண்டர்சே, மஹீஷ் தீக்ஷணா தலா 3 விக்கெட்டுகளும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |