சுவிட்சர்லாந்தில் குறைந்துள்ள குற்றங்களின் எண்ணிக்கை: ஆனால்...
In Switzerland, foreign nationals still account for more than 80%: சுவிட்சர்லாந்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் வெளிநாட்டவர்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறைந்துள்ள குற்றங்களின் எண்ணிக்கை
சுவிட்சர்லாந்தில் 2025ஆம் ஆண்டில், திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டு சிக்கியவர்களின் எண்ணிக்கை 7,956.

இந்த எண்ணிக்கை 2024இல் 8,355ஆக இருந்தது. அதாவது, 2024ஐ ஒப்பிடும்போது, 2025இல் திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எண்ணிக்கை 4.8 சதவிகிதம் குறைந்துள்ளது.
80 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் வெளிநாட்டவர்கள்
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரில் 81 சதவிகிதம் பேர் வெளிநாட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
அத்துடன், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் சுவிஸ் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள் அல்ல என்றும் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவிக்கிறது.
மேலும், புகலிடக்கோரிக்கையாளர்களைப் பொருத்தவரை, குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மிகவும் குறைவே என்கிறார்கள் அதிகாரிகள்!