பிரான்ஸ் தலைநகரில் வித்தியாசமான முறையில் திருட்டு: ஐந்து பேர் கைது
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், வித்தியாசமான முறையில் 90 இடங்களில் கொள்ளையடித்த ஐந்து பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளை
பாரீஸைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில், கொள்ளைச் சம்பவங்கள் நடந்த நிலையில், அவை அனைத்துக்குமே ஒரு ஒற்றுமை இருந்தது.
Photograph: Ian Allenden/Alamy
அந்த வீடுகளின் பூட்டுகளுக்குள், ஊசி வழியாக ஆசிட் அல்லது அமிலம் செலுத்தப்பட்டு, அந்த பூட்டை அந்த அமிலம் அரித்ததும், கதவைத் திறந்து கொள்ளையடித்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளது ஒரு கும்பல்.
தற்போது, அந்த கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்கள். 90 இடங்களில் கொள்ளையடித்தது தொடர்பில் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
The Guardian
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |