வரதட்சணை கேட்டு மனைவியை கிணற்றில் தள்ளிய சம்பவம்!..கணவன் கைது
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை கிணற்றில் தள்ளிய கணவரை பொலிசார் கைது செய்தனர்.
வரதட்சணை கொடுமை
மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் தனது மனைவியிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு மனைவியை கயிற்றில் கட்டி, கிணற்றில் தள்ளி சித்ரவதை செய்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்து 25 நாட்களுக்குப் பின்னர் தான் தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த சித்ரவதை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போதுதான் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொபைல் வீடியோ
இந்த சம்பவத்தை கணவர் ராகேஷ் தனது மொபைலில் வீடியோவாக எடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
புகாரையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய பொலிசார் இந்த வீடியோ ஆதாரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |