அவர்களுடைய ஆசை நிறைவேறாமலே போய்விட்டது... லண்டன் தீவிபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் தந்தை கதறல்
நேற்று முன் தினம், தெற்கு லண்டனிலுள்ள வீடு ஒன்றில் திடீரென தீப்பற்றியதைத் தொடர்ந்து, அந்த வீட்டிலிருந்த நான்கு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
தெற்கு லண்டனிலுள்ள, Sutton என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில், இரவு 7.00 மணியளவில் திடீரென தீப்பற்றியுள்ளது.
கொழுந்து விட்டெரிந்த அந்த தீயை அணைக்க, 8 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த 60 தீயணைப்பு வீரர்கள் ஒன்றரை மணி நேரம் போராட வேண்டியிருந்தது.
புகையினூடே வீட்டுக்குள் முகக்கவசம் அணிந்து நுழைந்த தீயணைப்பு வீரர்கள், அங்கு நான்கு குழந்தைகள் இருப்பதைக் கண்டு அவர்களை வெளியே தூக்கிக்கொண்டு வந்துள்ளார்கள். ஆனால், முதலுதவி அளித்தும், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அவர்கள் யாரையும் காப்பாற்றமுடியவில்லை. ந்து, அந்த வீட்டிலிருந்த நான்கு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
Kyson மற்றும் Bryson (4) Leyton மற்றும் Logan (3) என்னும் அந்த இரண்டு ஜோடி இரட்டைக் குழந்தைகள் அந்த வீடு தீப்பிடிக்கும்போது, வீட்டில் தனியாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
பிள்ளைகளின் தந்தையான Dalton Hoath (28)ம், தாய் Deveca Rose (27)ம் பிரிந்துவிட்டிருக்கிறார்கள். தாய், பிள்ளைகளுடன் வாழ, தந்தை வேறிடத்தில் தனியாக வாழ்ந்துவந்திருக்கிறார்.
இந்நிலையில், பிள்ளைகளை தனியாக விட்டுச் சென்றதால் குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தாயும் பிள்ளைகளுமே மட்டும் அந்த வீட்டில் வாழ்ந்துவந்ததாக கூறப்படும் நிலையில், கைது செய்யப்பட்ட பெண் தாய் Devecaவா என்பது தெரியவில்லை.
அத்துடன், பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டு விட்டு தாய் Deveca ஷாப்பிங் சென்றதாகவும், 7.00 மணிக்கு வீடு தீப்பிடித்த நிலையில், அவர் இரவு சுமார் 9.00 மணி வரை வீடு திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
கடைசியாக அவர் வீட்டுக்கு வந்தபோது எல்லாமே முடிந்து போயிருக்கிறது. அவர் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை என்கிறார்கள் அயலகத்தார்.
இந்நிலையில், பிள்ளைகளின் தந்தையான Dalton, பிள்ளைகள் நான்கு பேருமே, எப்போதும், எப்போது தங்கள் முதல் கால்பந்து விளையாட்டைத் துவங்குவது என்பது குறித்தே தன்னுடன் ஆர்வமுடன் பேசிக்கொண்டிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.
அவர்கள் முதன்முதலாக கால்பந்து விளையாடுவதைக் காண, தான் ஆவலாக இருந்ததாக கூறும் Dalton, இனி அவர்கள் விளையாடுவதைப் பார்க்க முடியாதே என கதறுகிறார்.
இதற்கிடையில், வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பொருத்தப்பட்டிருந்த அலங்கார விளக்குகளில் மின்கசிவு ஏற்பட்டு, பிவிசி கதவில் தீப்பிடித்து, அது பரவி வீட்டில் தீப்பிடித்திருக்கலாம் என கருதப்படுகிறது.
என்றாலும், பொலிஸ் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், அது உறுதியான தகவலா என்பது தெரியவில்லை.
குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பரிசளிப்பதற்காக வாங்கி வைத்திருந்த பரிசுப்பொருட்களுடன் காத்திருந்த பிள்ளைகளின் தாத்தா முதல், உறவினர்கள், அக்கம் பக்கத்தவர்கள் என பலரும் குழந்தைகளுக்கு மலர்களாலும் பொம்மைகளாலும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.