நாவூறும் சுவையில் தேங்காய் பூண்டு பொடி.., எப்படி செய்வது?
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இந்த தேங்காய் பூண்டு பொடியை விரும்பி உண்ணுவார்கள்.
இந்த சுவையான தேங்காய் பூண்டு பொடி இட்லி, தோசை என அனைத்திற்கும் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் தேங்காய் பூண்டு பொடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய்- 1
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- பூண்டு- 10 பல்
- உப்பு- தேவையான அளவு
- நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் தேங்காயை வெயிலில் சிறிது நேரம் காயவைத்து ஈரப்பதம் இல்லாமல் எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் பூண்டை தோலுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு வைத்து சாப்பிடும்போது இதில் சிறிதளவு நல்லெண்ணய் சேர்த்து கலந்து தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |