பாரம்பரிய சுவையில் தித்திக்கும் தேங்காய் திரட்டுப்பால்.., எப்படி தயாரிப்பது?
இந்த சுவையான தேங்காய் திரட்டுப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
இந்த சுவையான தேங்காய் திரட்டுப்பாலை பாரம்பரிய சுவையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் துருவல்- 1½ கப்
- பவுடர் வெல்லம்- ¾ கப்
- அரிசி மாவு- 1 ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- முந்திரி- 10
- உலர் திராட்சை- 10
- நெய்- தேவையான அளவு
- உப்பு- 1 சிட்டிகை
- பாசிப்பருப்பு- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் பாசிப்பருப்பு போட்டு வறுத்து நிறம் மாறியதும் அடுப்பை அனைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், வறுத்த பாசிப்பருப்பு போட்டு அரைத்து பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும்.
அடுத்து ஒரு வாணலில் நெய் ஊற்றி நறுக்கிய முந்திரி பருப்பு, உலர் திராட்சை போட்டு வறுக்கவும்.
இதற்கடுத்து கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அரைத்த தேங்காய் மற்றும் பாசிப்பருப்பு கலவையை சேர்க்கவும்.
பின்னர் இதில் பவுடர் வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும். தொடர்ந்து இதில் அரிசி மாவு சேர்த்து கலக்கவும்.
நெய் மொத்தமாக உறிஞ்சப்பட்டவுடன் ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிண்டவும்.
இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை போட்டு கிண்டவும்.
நெய் பிரிந்து வந்து தேங்காய் திரட்டுப்பால் மிதப்பது போல் தெரியும் போது அடுப்பில் இருந்து இறக்கி சாப்பிட்டால் மிகவும் சுவையான இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |