தித்திக்கும் சுவையில் தேங்காய் திரட்டுப்பால்.., எப்படி செய்வது?
தேங்காய் திரட்டுப்பால் பாரம்பரியமான மற்றும் சுவையான தென்னிந்திய இனிப்பு வகை.
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் தேங்காய் திரட்டுப்பால் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாசி பருப்பு- 2 ஸ்பூன்
- தேங்காய்- 1
- அரிசி மாவு- 2 ஸ்பூன்
- வெல்லம்- 1 கப்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- உப்பு- 1 சிட்டிகை
- நெய்- ½ கப்
- முந்திரி பருப்பு- 10
- தேங்காய் துண்டுகள்- ½ கப்
- உலர் திராட்சை- 10
செய்முறை
முதலில் ஒரு வாணலில் பாசி பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து பொடியாக அரைக்கவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், அரைத்த பாசி பருப்பு, அரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் தூள், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.

அடுத்து ஒரு வாணலில் சிறிதளவு நெய் சேர்த்து முந்திரி, உலர் திராட்சை மற்றும் நறுக்கிய தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து வாணலில் கால் கப் நெய் சேர்த்து அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.
பின்னர் வறுத்த முந்திரி, தேங்காய் துண்டுகள், உலர் திராட்சை மற்றும் நெய் சேர்த்து கைவிடாமல் நன்கு கிளறவும்.
இறுதியாக, இந்த கலவை வாணலில் நன்கு ஒட்டாமல் வந்ததும் இறக்கினால் சுவையான தேங்காய் திராட்டிப்பால் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |