தேங்காய் புளி சட்னி சாப்பிடனும் போல இருக்கா? அப்போ உடனே இப்படி செய்ங்க
பொதுவாகவே தினமும் காலையும் மாலையும் தோசை அல்லது இட்லி சாப்பிடுவது தான் தென்னிந்தியர்களின் வழக்கம்.
அந்த தோசை இட்லியை சாம்பாருடன் சாப்பிடுவதை விட, வித்தியாசமாக ஏதாவது சட்னி செய்து சாப்பிட்டால் சுவையும் அதிகம். வீட்டில் சாப்பிடுபவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆகவே வித்தியாசமாக தேங்காய் புளி சட்னி செய்து எப்படி சாப்பிடுவது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
1மூடி தேங்காய்
-
3ஸ்பூன் உளுந்து பருப்பு
-
4வர மிளகாய்
-
புளி
- கறிவேப்பிலை
- உப்பு
- பெருங்காய தூள்
- எண்ணெய்
1/2ஸ்பூன்
- கடுகு
1ஸ்பூன்
- உளுந்து பருப்பு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதனுடன் உளுந்து பருப்பு வர மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
சூடு குறைந்தவுடன் மிக்ஸியில் தேங்காய் புளி உப்பு பெருங்காயம் தூள் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்த பேஸ்டுடன் சேர்த்தால் சுவையான தேங்காள் புளி சட்னி தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |