சுவிட்சர்லாந்தில் மாற்று மருத்துவம் செய்வதாகக் கூறி பெண்களிடம் அத்துமீறிய மருத்துவர்
சுவிட்சர்லாந்தில் மாற்று மருத்துவம் செய்வதாகக் கூறி பெண்களிடம் அத்துமீறிய மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவர் கைது
சுவிட்சர்லாந்தின் ஃப்ரைபர்க் மாகாணத்தில், மாற்று மருத்துவம் செய்வதாகக் கூறி பெண்களிடம் அத்துமீறியுள்ளார் 58 வயது நபர் ஒருவர்.
சுமார் 12 பெண்களை துஷ்பிரயோகமும் செய்துள்ள அவருக்கு Châtel-saint-Denis நீதிமன்றம் ஒன்று 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அத்துடன், அவர் பாதிக்கப்பட்ட ஐந்து பேருக்கு 76’000 சுவிஸ் ஃப்ராங்குகள் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மன நல சிகிச்சை பெற அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், எளிதில் பாதிப்புக்குள்ளாகும் நிலையிலிருக்கும் நோயாளிகளுடன் வேலை செய்ய வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |