இப்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் கிடையாது... கொரோனா தொற்று அதிகம் உள்ள நிலையிலும் கனேடிய மாகாணம் ஒன்று அறிவிப்பு
கனேடிய மாகாணம் ஒன்றில் கொரோனா தொற்று அதிகம் உள்ள நிலையிலும், இப்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saskatchewan மாகாணத்தின் பிரீமியரான Scott Moeதான் இவ்வாறு அறிவித்துள்ளார்.
புதன்கிழமை நிலவரப்படி, Saskatchewan மாகாணத்தில் 4,313 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. அதே நாளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மாகாணத்தில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
பெடரல் அரசின் கூற்றுப்படி, கடந்த ஏழு நாட்களில், நாட்டிலேயே கொரோனாவால் உயிரிழந்தவர்கள் Saskatchewan மாகாணத்தில்தான் அதிகம். அத்துடன், கடந்த ஏழு நாட்களில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் அங்குதான் அதிகம்.
Saskatchewan மாகாண மருத்துவர்கள் பலர் கட்டுப்பாடுகளை அதிகரிக்கவேண்டும் என கோரி வருகிறார்கள்.
ஆனாலும், ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன. அத்துடன், பெரும்பான்மையோர் தடுப்பூசி பெற்றுள்ள நிலையில், இப்போதைக்கு இருக்கும் கட்டுப்பாடுகளே தொடர்ந்து அமுலில் இருக்கும் புதிதாக கட்டுப்பாடுகள் எதுவும் இப்போதைக்கு விதிக்கப்படாது என்று கூறியுள்ளார் Moe.