பிரித்தானியாவில் தேர்தல் நடப்பதே தெரியாது: பிரித்தானிய பெண் பிரபலம் கூறியுள்ள விடயம்
பிரித்தானியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை ஒருவர், இன்று பிரித்தானியாவில் தேர்தல் நடப்பதே தனக்குத் தெரியாது என்றூ கூறியுள்ளார்.
பிரித்தானிய பெண் பிரபலம் கூறியுள்ள விடயம்
Team name suggestions at the ready...@EmmaRaducanu and @andy_murray will be entering this year's Mixed Doubles Championship as wild cards ??#Wimbledon pic.twitter.com/ILAdl99y3n
— Wimbledon (@Wimbledon) July 3, 2024
பிரித்தானியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான எம்மா ரடுகானு (21) விம்பிள்டன் போட்டிகளில் பங்கேற்றுவரும் நிலையில், தேர்தலில் வாக்களிக்கப்போகிறீர்களா என அவரிடம் நேற்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த எம்மா, தேர்தல் நாளை என்பதே எனக்குத் தெரியவில்லை என்று பதிலளித்தார். அத்துடன், தான் வாக்களிக்கப்போவதில்லை என்றும், ஓய்வெடுத்துவிட்டு அடுத்த போட்டிக்காக பயிற்சி செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
பிரபலங்களின் பதில்
மற்றொரு பிரித்தானிய டென்னிஸ் வீராங்கனையான Katie Boulterஇடமும் நீங்கள் தேர்தலில் வாக்களிப்பீர்களா என கேட்கப்பட்டபோது, அவரும் இப்போதைக்கு விளையாட்டில் கவனம் செலுத்தப்போகிறேன் என்றார்.
Harriet Dart என்னும் பிரித்தானிய வீராங்கனையும் விளையாட்டைத் தவிர தான் வேறு எந்த விடயத்திலும் தலையிடப்போவதில்லை என்றார்.
பிரித்தானியாவின் நம்பர் 1 வீரர் என அழைக்கப்படும் Jack Draperஇடம் தேர்தலில் வாக்களிக்கப்போகிறீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அவர், வெறுமனே, இல்லை என்று மட்டும் கூறிவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |