பிரித்தானியாவை விட்டால் எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை... பணிந்தார் மேக்ரான்!
பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் மீன் பிடி உரிமம் தொடர்பில் தொடர்ந்து உரசல்கள் இருந்துவந்த நிலையில், இருவரும் மாறி மாறி பழிக்குப் பழி வாங்கப்போவதாக மிரட்டிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால், அந்த சொற்போர் இப்போது முடிவுக்கு வந்துவிட்டதுபோல் தோன்றுகிறது.
ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இந்த சொற்போரை நிறுத்த விரும்புவதாக பிரான்ஸ் தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
பிரித்தானியாவின் ஆதரவு தங்களுக்குத் தேவை என்பதை பிரான்ஸ் தாமதமாக புரிந்துகொண்டிருக்கிறது. விடயம் என்னவென்றால், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறியதும், பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட எந்த நாட்டினாலும் தாலிபான்களை தனியாக எதிர்க்கமுடியவில்லை. அதாவது அமெரிக்காவின் ஆதரவு இல்லாத நிலையில் பிரித்தானியா போன்ற மற்றொரு வலிமையான நாட்டின் இராணுவத்தின் ஆதரவு பிரான்சுக்கு மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கே தேவை என்பதை பிரான்ஸ் புரிந்துகொண்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது, நாம் இத்தாலியையோ, ஸ்பெயினையோ அல்லது ஜேர்மனியையோ சார்ந்திருக்க முடியாது. பிரித்தானியா இல்லாமல் ஐரோப்பாவுக்கான பாதுகாப்பு குறித்து பேச முடியாது என ஜனாதிபதி அறிந்திருக்கிறார் என பிரான்ஸ் தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஏதாவது ஒரு நாடு பிரான்சுடன் போருக்கு வருமானால், உதவிக்கு பிரான்ஸ் பிரித்தானியாவைத்தான் அழைக்கவேண்டும்.
ஆகவே, மீன்பிடி உரிமம் போன்ற சின்ன விடயங்களுக்காக சண்டை போட்டு, ஐரோப்பாவின் பாதுகாப்பு போன்ற பெரிய விடயங்களை இழக்க பிரான்ஸ் விரும்பவில்லை. இதுதான் பிரான்ஸ் பணிய காரணம்.
ஐரோப்பாவிலேயே தனது இராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடு பிரித்தானியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.