கொரோனா பரவலால் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட இன்னொரு மாற்றம்
சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டில் மட்டும் எத்தனை பேர் குற்றச்சாட்டுகளில் சிக்கினர் என்று பெடரல் புள்ளிவிவர அலுவலகம் அறிவித்துள்ளது.
இதில் 2019ம் ஆண்டை விடவும் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் 2020ம் ஆண்டு குற்றச்செயல்கள் 11 சதவீதம் அளவுக்கு குறைவாக பதிவாகியுள்ளது.
மேலும், ஒட்டுமொத்தமாக 95,000 பேர்கள் பெடரல் குற்றப்பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். போதைமருந்து தொடர்பான குற்றச்செயல்களும் 14 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமகவே எண்ணிக்கை சரிவடைந்துள்ளதாக பெடரல் புள்ளிவிவர அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
உணவகங்கள் மதுபான விடுதிகள் மூடப்பட்டிருந்ததால், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் 15% அளவுக்கு குறைந்துள்ளது.
இருப்பினும் அபராதம் விதிக்கப்படுவது மட்டும் எந்த மாறுதலும் இன்றி தொடர்வதாகவும், மொத்த வழக்குகளில் 70 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.