பிரான்ஸ் ஜனாதிபதியாக நான் இருக்கும் வரை இது உயராது! உறுதியளித்த மாக்ரான்
பிரான்சில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது குறித்து தெளிவுப்படுத்திய ஜனாதிபதி மாக்ரான், வரி உயர்வு குறித்தும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரான்சில் செவ்வாய்க்கிழமை 2,70,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
நாட்டிலே இதுவரை பதிவான அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பிரான்சில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பில்லை என ஜனாதிபதி மாக்ரான் தெளிவுப்படுத்தியுள்ளார்.
தொற்றுநோய் காரணமாக பிரான்சிற்கு பெரும் கடன் சுமை ஏற்பட்டுள்ள நிலையில், பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிப்பதன் மூலம் இதிலிருந்து மீளலாம் என மாக்ரான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதேசமயம், தான் ஜனாதிபதியாக இருக்கும் வரை வரி உயர்வு இருக்காது என உறுதியளித்துள்ளார்.