இலங்கையில் நடக்கும் கிரிக்கெட்டில் அதிக முக்கியத்துவம் இருக்கு! ஐபிஎல்லில் பணம் தான் பெரியது... அதிரடியாக விலகிய நட்சத்திர வீரர்
ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளாமல், தானாகவே விலகியது தொடர்பில் முதல் முறையாக நட்சத்திர வீரர் டேல் ஸ்டெயின் பேசியுள்ளார். 2021 ஐபிஎல் ஏலம் சமீபத்தில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த டேல் ஸ்டெயின், இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளாமல், தானாகவே தனது பெயரை விலக்கினார்.
இது குறித்து ஸ்டெயின் கூறுகையில், ஐபிஎல் தொடர் தவிர மற்ற டி 20 லீக்களில் ஆடுவது என்பது, ஒரு வீரராக சற்று அதிக பலனளிப்பதை நான் கண்டேன்.
ஐபிஎல் தொடரில் ஆடும் போது, அணியின் பெயருக்கும், ஒரு வீரருக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும், பணம் குறித்த பேச்சிற்கும் தான் அதிக இடம் இருப்பதாக நான் உணர்கிறேன்.
ஆனால், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் டி 20 தொடர்களில், பணத்தை விட, கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக தோன்றுகிறது.
ஐபிஎல்லை பொறுத்தவரை வீரர் எவ்வளவு தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பதே விவாத பொருளாக இருக்கிறது.
இதையடுத்தே ஏலத்தில் இருந்து விலகியதாக கூறியுள்ளார்.