பளபளப்பான சருமத்திற்கு இந்த 3 பொருட்கள் போதும்: எப்படி பயன்படுத்துவது?
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சருமத்தை பளபளப்பாக்க இந்த மூன்று பொருட்கள் போதும்.
தோல் பராமரிப்பு என்று வரும்போது க்ளென்சர், மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் ஆகியவை மிக முக்கியமான தயாரிப்புகளாகும்.
1. க்ளென்சர்
எந்தவொரு பொருட்களையும் பயன்படுத்துவதற்கு முன், முகத்தை வெதுவெதுப்பான நீர் மற்றும் லேசான க்ளென்சர் கொண்டு கழுவுவது முக்கியம்.
எண்ணெய் மற்றும் முகப்பரு பாதிப்புள்ள சருமம் உள்ளவர்கள் நுரைக்கும் க்ளென்சரை பயன்படுத்தலாம்.
அதே சமயம் சாதாரண மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் மென்மையான, நுரை வராத க்ளென்சரை பயன்படுத்துங்கள்.
2. மாய்ஸ்சரைசர்
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மாய்ஸ்சரைசர் மிகவும் முக்கியமாகும். மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தினால் சருமத்தைப் பாதுகாக்கலாம்.
சாதாரண சருமம் மற்றும் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இலகுவான மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்தலாம்.
3. சன்ஸ்கிரீன்
சில மாய்ஸ்சரைசர்களில் SPF 15 இருந்தாலும், Landricinia மற்றும் Colombo ஆகியவை சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த அறிவுறுத்துகின்றன.
ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு முறை வெயிலில் சென்றால் மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
தீங்கு விளைவிக்கும் UVA மற்றும் UVB கதிர்களைத் தடுக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சிறந்தது.
குறைந்தபட்சம் SPF 30 உள்ள ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். இதனை பயன்படுத்துவது சருமத்திற்கு நல்லது மற்றும் தோல் புற்றுநோயைத் தடுக்க உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |