குறைந்த உடல் பருமன் உடையவர்கள் வாழும் 5 நாடுகள்.., எது எது தெரியுமா?
உலக சுகாதார தரவுகளின்படி, சில நாடுகளில் உடல் பருமன் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.
பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த நாடுகளில் காய்கறி, பருப்பு, அரிசி, மீன் போன்ற பாரம்பரிய உணவுகள் அதிகமாக சாப்பிடப்படுகின்றன.
மேலும் மக்கள் அதிகமாக நடப்பது, உடல் உழைப்பு செய்வது போன்ற காரணங்களால் உடல் பருமன் குறைவாக உள்ளது.
அந்தவகையில், குறைந்த உடல் பருமன் உடையவர்கள் வாழும் 5 நாடுகள் எது என்பது குறித்து பார்க்கலாம்.

வியட்நாம்
உலகளவில் உடல் பருமன் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் வியட்நாம் முன்னிலையில் உள்ளது. இங்கு பெரியவர்களில் 3 சதவீதத்திற்கும் குறைவானவர்களே உடல் பருமனுடன் உள்ளனர்.
பங்களாதேஷ்
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்திலும் உடல் பருமன் விகிதம் உலக சராசரியைவிட மிகவும் குறைவாக உள்ளது. இங்கு பலர் உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் வேலைகளில் ஈடுபடுவதும் உடல் எடை குறைவாக இருக்க உதவுகிறது.
திமோர்-லெஸ்டே
தென் கிழக்கு ஆசியாவில் உள்ள இந்த நாட்டிலும் உடல் பருமன் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. சோளம், மரவள்ளி கிழங்கு, காய்கறிகள் மற்றும் மீன் போன்ற உள்ளூர் உணவுகள் அதிகமாக உணவில் சேர்க்கப்படுகின்றன.
எத்தியோப்பியா
எத்தியோப்பியாவில் உடல் பருமன் விகிதம் பல மேம்பட்ட நாடுகளை விட மிகவும் குறைவாக உள்ளது. இங்கு டெஃப் போன்ற முழுதானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் அதிகமாக உணவில் இடம்பெறுகின்றன.
நேபால்
இந்தியாவின் அண்டை நாடான நேபாளிலும் உடல் பருமன் விகிதம் உலகில் மிகவும் குறைவான நாடுகளில் ஒன்றாக உள்ளது. பாரம்பரிய உணவு முறையும், மலைப்பகுதிகளில் வாழும் மக்களின் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையும் உடல் பருமன் குறைவாக இருக்க காரணமாகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |