தொங்கும் தொப்பையை ஓட ஓட விரட்ட வேண்டுமா? இதை மட்டும் சாப்பிட்டால் போதும்
கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம், உடற் பயிற்சி இல்லாத காரணமாக உடலில் தொப்பை வருகிறது.
இந்த தொப்பையை குறைக்க பல வழிகளில் பல முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
அந்தவகையில் உடல் எடையை குறைக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த 6 ஆரோக்கியமான காய்கறிகளை பற்றி பார்க்கலாம்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை நிறைந்துள்ளன.
மேலும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த கிழங்கு சாப்பிடுவதால் நீண்ட காலத்திற்கு வயிற்றை முழுதாக உணர வைக்கிறது. இதயநாள் உடல் எடை குறையும்.
பீட்ரூட்
பீட்ரூட்டில் நச்சுத்தன்மையை அகற்ற உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் உடல் எடையை குறைக்க பெரிதளவில் உதவுகிறது.
மேலும் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்த பீட்ரூட் கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது.
முள்ளங்கி
முள்ளங்கியில் உள்ள அதிக நீர் உள்ளடக்கம் உடலை எப்பொழுதும் நீரேற்றமாக வைத்திருக்கும்.
முள்ளங்கியில் இருக்கும் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் கலவைகள், உடல் கலோரிகளை விரைவாக எரிக்க உதவுகிறது.
கேரட்
கேரட்டில் வைட்டமின்கள் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
கேரட்டை உட்கொள்வது ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதைத் தடுத்து நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் முழுமை உணர்வை ஊக்குவிக்குவித்து எடை இழப்பிற்கு உதவுகிறது.
கோசுக்கிழங்கு
கலோரிகள் குறைவாக இருந்தாலும், கோசுக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
அதனால் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதில் இருந்து தடுக்கிறது.
சுரைக்காய்
சுரைக்காயில் உள்ள நீர்ச்சத்துக்கள் உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
உடல் எடையை குறைக்க உணவில் சுரைக்காய் சேர்க்கவும். உடல் எடையைக் குறைப்பதோடு, உடலை நச்சுத்தன்மையாக்குவதற்கும் இது பெரிதளவில் உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |