வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.., 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |