உலகில் சூரியன் மறையாமல் பிரகாசமாகவே இருக்கும் இடங்கள்: எங்கு தெரியுமா?
பூமியின் சுழற்சி மற்றும் அச்சின் சாய்வின் காரணமாக, ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் வட்டாரங்களில் சூரியன் தொடர்ந்து பிரகாசிக்கும்.
இதை "மிட்நைட் சன்" என்று அழைப்பார்கள். அந்தவகையில், சூரியன் மறையாத சில இடங்கள் குறித்து பார்க்கலாம்.
1. நார்வே- நார்வேயின் பல பகுதிகளில் மே முதல் ஜூலை வரை சூரியன் மறையாமல் பிரகாசமாகவே இருக்கும். நார்வேயில் இரவு என்பதே கிட்டத்தட்ட இருக்காது என்று கூறலாம். அதாவது சுமார் 76 நாட்களுக்கு நார்வேவில் இரவே இருக்காது.
2. சுவீடன்- சுவீடனின் வடக்குப் பகுதிகளிலும் இதேபோன்று சுமார் 60 நாட்களுக்கு சூரிய மறைவே இருக்காது.
3. கனடா- கனடாவின் நுனாவட் மற்றும் யூகான் பகுதிகளில் கோடை காலத்தில் சூரியன் தொடர்ந்து பிரகாசிக்கும். இங்கு சுமார் 60 முதல் 100 நாட்கள் வரை சூரிய மறைவே இருக்காது.
4. அலாஸ்கா- அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் சுமார் 82 நாட்களுக்கு சூரியன் மறைவே இருக்காது.
5. பின்லாந்து- பின்லாந்து வடக்குப் பகுதிகளிலும் மிட்நைட் சன் நிகழ்வை காணலாம். பின்லாந்தில் 60 முதல் 70 நாட்களுக்கு சூரிய மறைவே இருக்காது.
இது மட்டுமின்றி, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளிலும் "மிட்நைட் சன்" நிகழ்வு இடங்கள் மற்றும் வானிலைக்கு தகுந்தாற்போல இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |