பிரித்தானியாவில் இந்த 8 பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்! சுகாதார செயலாளர் முக்கிய அறிவிப்பு
பிரித்தானியா தலைநகர் லண்டன், கென்ட் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், கொரோனா வைரஸ் சோதனைக்கு ஒப்புக்கொள்ளுமாறு நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானியாவில் கடந்த 6 நாட்களில் சுமார் 11 பேருக்கு தென் ஆப்பரிக்காவில் தோன்றிய புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொற்று உறுதியான 11 பேருக்கும் சர்வதேச பயண தொடர்பு ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் செய்தியார்களை சந்தித்த நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், எட்டு அஞ்சல் குறியீட்டு எண்களை வெளியிட்டு, இந்த பகுதிகளில் வீட்டிற்கு வீடு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் என உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த திட்டம் Southport (PR9), Walsall (WS2), Ealing (W7), Tottenham (N17), Mitcham (CR4), Broxbourne (EN10), Maidstone (ME15) and Woking (GU21) ஆகிய பகுதிகளை கண்காணிக்கும்.
மேலும், இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் தென் ஆப்பரிக்காவில் தோன்றிய புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரையும் கண்டுபிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தென் ஆப்பரிக்காவில் தோன்றிய கொரோனா கடுமையானது என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை, ஆனால் நாங்கள் அதன் தீவிரத்தை குறைக்க வேண்டும்.
நிபுணர்கள் நாட்டில் 80,000 பேரை அவசரமாக பரிசோதிக்கவும், மேலும் உள்ளூர் பரவல்களை தடுக்கவும் முயல்கின்றனர் என சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.