முதலில் ருவாண்டா நாட்டுக்கு அனுப்பப்படும் புலம்பெயர்ந்தோர் இவர்கள்தான்: பிரித்தானியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்வோரை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்தின் கீழ் முதன்முதலில் பிரித்தானியாவால் வெளியேற்றப்படுவோர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியாயிற்று.
சர்ச்சைக்குரிய அந்த திட்டத்தின் முதல் கட்டமாக சில சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதை பிரித்தானிய உள்துறை அமைச்சரான பிரீத்தி பட்டேல் உறுதி செய்துள்ளார்.
முதல் கட்டமாக எத்தனை பேர் ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்பது குறித்த விவரத்தை வெளியிட உள்துறை அலுவலக அதிகாரிகள் மறுத்துவிட்டாலும், அவர்கள் வடபிரான்சிலிருந்து ரப்பர் படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்தவர்கள் என கருதப்படுகிறது.
ருவாண்டாவுக்கு அனுப்பப்பட இருக்கும் அந்த புலம்பெயர்ந்தோருக்கு, அது குறித்த அதிகாரபூர்வ நோட்டீஸ் அளிக்கப்பட்டுவிட்டதாக நேற்று பிரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரும் திங்கட்கிழமை முதல் சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைபவர்களுக்கு ருவாண்டா திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்னும் பிரித்தானியா அதிரடியாக அறிவித்துள்ளது.