அடிக்கடி சிறுநீரக கற்கள் உருவாக இவைகளால் தான் காரணம்... எச்சரிக்கையாக இருங்க
இன்றைய காலத்தில் சிறுநீரக கற்கள் பிரச்சனை பரவலாக பெருகி வரும் நோய்களுள் ஒன்றாக உள்ளது.
உடலில் தேங்கும் கழிவுப்பொருட்களால் சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீரக கற்கள் உருவாகின்றன.
சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பை வரை, சிறுநீர்க் குழாயின் எந்தப் பகுதியிலும் கழிவுப்பொருட்களின் படிகங்களால் சிறுநீர் கற்கள் உருவாகலாம்.
இதனால், இடுப்பு பகுதியில் மிகவும் கடிமான வலி உண்டாகும். சரியான நேரத்தில் நோய் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் நோய் பாதிப்பின் தீவிரத்தில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.
ஒருவருக்கு அடிக்கடி சிறுநீரக கற்கள் உருவாவதற்கு மரபணுக்கள் மட்டுமின்றி, வேறு சில காரணங்களும் உள்ளன.
அவற்றை அவசியம் தெரிந்து வைத்து கொள்வது அவசியமானது ஆகும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- சிறுநீரக கற்கள் ஏற்கனவே வந்திருந்தால், அவர்கள் தவறாமல் 3 லிட்டர் நீரை பருக வேண்டும். இதற்கு குறைவான அளவில் நீரைப் பருகி வந்தால், மீண்டும் சிறுநீரக கற்கள் வரும் அபாயம் அதிகரிக்கும்.
- குடிக்கும் நீரில் கனிமங்கள் அதிகம் இருந்தாலும், அவை சிறுநீரக கற்களை வரவழைக்கும் . அதனால் தான் குழாய் நீரைப் பருகுபவர்களை விட, கிணற்று நீரை பருகுபவர்களுக்கு சிறுநீரக கற்கள் வரும் அபாயம் அதிகம் உள்ளது.
- சரியாக சிறுநீர் வெளியேறாமல் இருந்தால், சிறுநீர் கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே உங்களது சிறுநீர்ப் பாதையின் கட்டமைப்பு அசாதாரணத்தன்மையுடன் இருந்தால், ஒவ்வொரு வருடமும் அல்ட்ராசவுண்ட் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
- உங்களுக்கு கார்போனேட்டட் பானங்கள் பருகும் பழக்கம் இருந்தால், உடலில் அதிகளவு அமிலம் காரணமாக, மீண்டும் மீண்டும் சிறுநீர் கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆகவே ஒருமுறை சிறுநீர் கற்கள் வந்தால், அமிலம் நிறைந்த உணவுகள், பானங்கள், உப்புமிக்க உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
- தைராய்டு சுரப்பியில் புற்றுநோய் வந்தால், அது அதன் அருகில் உள் பாராதைராய்டு சுரப்பியைப் பாதிக்கும். பாராதைராய்டு சுரப்பி கால்சியத்தை வளர்ச்சிதை மாற்றம் செய்யும் முக்கிய பணியைச் செய்யக்கூடியது. இந்த சுரப்பி பாதிக்கப்பட்டால், அது உடலில் கால்சியத்தை படியச் செய்து, சிறுநீர்க் கற்களை உருவாக்கும்.