இந்த கெட்ட பழக்கம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதாம்! இது உங்களுக்கு தெரியுமா?
நகம் கடிப்பது, வீடியோ கேம் விளையாடுவது, சிறிது நேரம் உறங்குவது, காஃபி அருந்துவது, பகல் கனவு காணுதல், சூயிங்கம் மெல்லுதல், மூக்கு குடைவது போன்றவை கெட்ட பழக்கங்களாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால் இது போன்ற கெட்ட பழக்கங்களினாலும் நம் உடல் நலனுக்கு ஆரோக்கியம் உள்ளது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அது தொடர்பாக கீழே காண்போம்
குட்டி தூக்கம்
உடல் சோர்வடையும் போது அசதியில் நம்மை அறியாமலேயே உறங்கிவிடுவோம், இது கெட்ட பழக்கமாக இருந்தாலும், இதன் மூலம் சில நன்மைகளும் உள்ளது. நம் உடலின் எனர்ஜி அளவு அதிகரிப்பதுடன், மனம் விழிப்புணர்வு அடைகிறது.
காஃபி அருந்துவது
அடிக்கடி காஃபி அருந்துவது நம் உடல் நலத்திற்கு நல்லதல்ல. ஆனால் காஃபி அளவோடு குடிப்பதால் அது அல்சைமர், நீரிழிவு நோய், கல்லீரல் புற்றுநோய் போன்ற பல நோய்களின் பாதிப்பினை குறைக்க உதவுகிறது.
மூக்கு குடைவது
சிலர் மூக்கு குடைந்து அந்த விரலை வாயில் வைப்பார்கள், இது கெட்ட பழக்கத்தில் ஒன்று. ஆனால் அதனால் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக பிரட்ரிச் பிரிட்சிங்கர் எனும் நுரையீரல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
நகம் கடித்தல்
நகம் கடிப்பது தீய பழக்கங்களின் ஒன்று தான். இந்த நகம் கடிக்கும் பழக்கத்தினால் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, பல தொற்று நோய்களின் பாதிப்பு வராமல் தடுக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பகல் கனவு
பகல் கனவு காணுவது நேரம் வீணாகுவதாக பலரும் நினைக்கலாம். ஆனால் அதனால் கற்பனை திறன் அதிகரித்து, மூளையின் செயல்பாடு சுறுசுறுப்பாக இயங்குவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சூயிங்கம் மெல்லுதல்
சூயிங்கம் மெல்லுதல் ஒரு கெட்ட பழக்கமே. ஆனால் இதை செய்வதால் நம் உடல் எனர்ஜி மற்றும் மூளையின் செயல்பாடு அதிகரித்து, மன அழுத்தம் குறைவதாக மருத்துவர் கின் யா குபு தெரிவித்துள்ளார்.