பழைய சோறு சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா! ஒரு ஆச்சரிய தகவல்
பழைய சோறு சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைப்பதோடு பல நோய்களை அது குணமாக்குகிறது.
பழைய சோறு சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதங்கள்
சோற்றில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கும் போது, லாக்டோ பேசிலஸ் பாக்டீரியாக்கள் பெருகுகின்றன. இது, வயிற்றுக்கு மிகவும் நன்மையை தரும். பழைய சோற்றில் ஸ்டார்ச் எனப்படும் மாவுப்பொருட்கள் அதிகம் இருப்பதால், எளிதில் ஜீரணித்து, உடலுக்கு சக்தியை தருகிறது.
பழைய சோற்றின் பலன்களை அமெரிக்கன், 'நியூட்ரிஷன் அசோசியேஷன்' விவரித்துள்ளது. இந்த நீராகாரத்தில் வைட்டமின்கள் அதிகம். வெறும் வயிற்றில் நீராகாரம் அருந்தினால் மலச்சிக்கல், உஷ்ணம் உட்பட அனைத்து வயிற்று கோளாறுகளும் நீங்கும். 'ஆற்று நீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டும் போக்கும்...' என்ற கூற்றின் அளவிற்கு பழைய சாதம், வாதத்தையும், பித்தத்தையும் போக்கும் தன்மையுள்ளது.
வெயிலில் அலைபவர்கள், பழைய சோற்றை உண்பதால், உடல் வெப்பம் குறையும். சன் ஸ்ட்ரோக் போன்ற பிரச்னை தீரும். நாள் முழுவதும் வெயிலில் வயலில் வேலை பார்க்கும் போது, புத்துணர்ச்சியை தருவது பழைய சோறு.
பழைய சோறு சாப்பிட்டுபவர்களுக்கு, அம்மை போன்ற தொற்று நோய்கள் வராது.
இன்றும் பழையதுடன் இரண்டு சிறிய வெங்காயம் வைத்து உண்ணும் வழக்கம் உண்டு.
இவ்வாறு உண்பதால் வெங்காயத்தின் தன்மை ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, மாரடைப்பை தடுக்கிறது. நீராகாரத்தை அருந்தி வருவதால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறுவதுடன், ரத்த அழுத்தம் சீராக்கப்படுகிறது.
வெயில் காலத்தில் நம் உடலில் அதிகரிக்கும் பித்தத்தை சமநிலைப்படுத்தி உடலையும், மனதையும் சாந்தப்படுத்துவதால், முகத்தில் தேஜஸ் கூடும்.
பழைய சோற்றை, ஏறு வெயிலில் அதாவது மதியம் வரை மட்டுமே சாப்பிடுவது சாலச் சிறந்தது. இறங்கு வெயில் எனப்படும் மாலை நேரங்களில் உண்ணக்கூடாது.