என் பாதங்கள் ஒரு பில்லியன் யூரோக்கள் மதிப்புடையவை: ஒரே போடாய் போட்ட ஜாம்பவான் ரொனால்டோ
பிரபல கால்பந்து வீரரிடம் ஜாம்பவான் ரொனால்டோ தன்னுடைய கால்கள் ஒரு பில்லியன் யூரோக்கள் மதிப்புடையவை என கூறியுள்ளார்.
ரொனால்டோவுடன் விளையாடிய அனுபவம்
Weston McKennie என்ற அமெரிக்க கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோவுடன் இணைந்து Juventus கிளப்புக்காக விளையாடியுள்ளார். அவர் சமீபத்தில் ரொனால்டோவுடன் விளையாடி பழகிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
Weston கூறுகையில், ரொனால்டோவுடன் ஒரு சம்பவம். அப்போது அவர் மசாஜ் செய்து கொண்டிருந்தார், நான் நடந்து சென்று கொண்டிருந்த போது, அட உங்கள் கால்கள் பார்ப்பதற்கு பயங்கரமாகத் தெரிகின்றன என கூறினேன்.
“He said: my friend, these feet are worth 1 billion euros”
— USMNT Only (@usmntonly) February 2, 2023
This Weston McKennie story about Cristiano Ronaldo is amazing ?
(via @LUFC, @TelemundoSports)
pic.twitter.com/YzdPuA2T2d
என் பாதங்கள் ஒரு பில்லியன் யூரோக்கள் மதிப்புடையவை
அதற்கு ரொனால்டோ என்னிடம், என் நண்பரே இந்த பாதங்கள் ஒரு பில்லியன் யூரோக்கள் மதிப்புடையவை என நகைச்சுவையாக சொன்னார். நீங்கள் சொல்வது சரிதான் என்றேன் என கூறியுள்ளார்.
Total Sportal வெளியிட்ட தகவலின்படி ரொனால்டோ €103 மில்லியனுக்கு தனது கால்களை காப்பீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.