இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்! நுரையீரலில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்யுமாம் உஷார்
முன்பெல்லாம் குளிர் காலத்தில் மட்டும் தான் சளி தொல்லை இருக்கும். ஆனால், இப்போது எல்லா காலங்களிலும் பலரையும் சளி தொல்லை வாட்டுகிறது.
ஐஸ் கிரீம், குளிர்பானங்கள் சாப்பிட்டால் மட்டுமே சளி பிடிக்கும் என்பது கிடையாது.
சில உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டாலும் சளி பிடிக்கும். அப்படியான உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
காரணம், இந்த வகை உணவு பொருட்கள் தான் நுரையீரலில் சளியை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. இது படிப்படியாக உடல் முழுக்க பரவி மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன.
பொரித்த உணவு
சளி தொல்லை கொண்டோர் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை தவிர்த்தாலே சளி குறையும்.
மீறி தொடர்ந்து சாப்பிட்டால் ஆஸ்துமா போன்ற மோசமான பிரச்சினையை உண்டாக்கும்.
பால் பொருட்கள்
சளியை உற்பத்தி செய்வதில் பால், தயிர், சீஸ், வெண்ணெய் போன்ற உணவுகளும் முதன்மையான இடத்தில் உள்ளது.
ஆகவே சளி இருக்கும் நேரத்தில் அதை சாப்பிட வேண்டாம்.
இறைச்சி
இறைச்சியில் ஹிஸ்டமைன் என்கிற மூல பொருள் உள்ளது. இதை சாப்பிடுவதால் நேரடியாக உங்களின் உடலில் சளி பெருக தொடங்கும். மேலும், கொஞ்சம் கொஞ்சமாக இவற்றின் பாதிப்பு உயர்ந்து, பின் சுவாசிக்க முடியாத அளவில் இதன் தாக்கம் இருக்கும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
க்ளுட்டன் உணவுகள்
அதிக அளவில் க்ளுட்டன் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருந்தாலே சளி உருவாவதை தடுத்து விடலாம். கோதுமை போன்றவற்றில் க்ளுட்டன் அதிக அளவில் நிரம்பி உள்ளதால் அவை எளிதில் சளியை உற்பத்தி செய்யும்.