இனி இரவில் தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்! உணவுகள் விஷமாகும் அபாயம்
Health tips
Chicken
Digestion Problem
By Logeswari
பொதுவாக இரவில் தூங்குவதற்கு முன் முடிந்த வரை கம்மியாக சாப்பிட வேண்டும் என்று கூறப்படுவது உண்டு.
ஆனால் நம்மில் பலர் காலை முதல் பரபரப்பாக இருந்து விட்டு இரவில் மட்டும் நிதானமாக இருக்க சிறிது நேரம் கிடைப்பதால் நாம் அப்போது மட்டும் வயிறு நிறைய திருப்பதியாக சாப்பிட்டு விடுகிறோம்.
அதுவும் பரோட்டா, பிரியாணி போன்ற உணவுகளை சாப்பிடுகிறோம். இப்படி இரவில் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்..
- இறைச்சியும், பிரியாணியில் உள்ள சுவையூட்டும் எண்ணெய் பொருட்கள் செரிமான பிரச்சினைகளை உருவாக்குவதோடு மனித உடலின் இயல்பான இயக்கத்தையும் சீர்குலைத்துவிடும். நள்ளிரவு பிரியாணிக்கு குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை பயன்படுத்தினால் இருமடங்கு பாதிப்பு ஏற்படும்.
- சில ஓட்டல்களில் பிரியாணியை மீண்டும் சூடுபடுத்தி பரிமாறும் பழக்கம் இருப்பதுண்டு. இவை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது. அதனால் நள்ளிரவில், இதுபோன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். பிரியாணி மட்டுமின்றி நள்ளிரவில் பீட்சா, பாஸ்தா, நூடுல்ஸ், சாக்லெட், இறைச்சி போன்றவை தவிர்க்க வேண்டும்.
- இரவு நேரத்தில் பிரியாணி போன்ற உணவுகளை வயிறு நிறைய சாப்பிடுவதால் அது சரியாக ஜீரணம் ஆகாமல் போய்விடுகிறது. இதனால் கூடுதல் கலோரிகள் கொழுப்பாக தேங்க ஆரம்பிக்கிறது. இதனால் குடல் அலர்ஜி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.
-
இரவு நேரத்தில் வயிறுமுட்ட சாப்பிடுவதால் அது தூக்கத்தை கெடுக்கிறது. இதனால் இரவில் ஹெவியான உணவுகளை சாப்பிடாமல், இட்லி தோசை போன்ற மிதமான உணவுகளை சாப்பிடுவது நல்லது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US