நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் ஞாபக மறதியை அதிகரிக்குமாம்! இனி இதையெல்லாம் சாப்பிடாதீங்க
நம் செல்போனையோ, மூக்கு கண்ணாடியையோ வீட்டில் எதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டு அதை எங்கு வைத்தோம் என தெரியாமல் தேடி கொண்டே இருப்போம். இந்த அனுபவம் எல்லா வயதினருக்கும் வந்திருக்கும். இதற்கெல்லாம் காரணம் ஞாபக மறதி தான். நாம் உண்ணும் சில உணவுகளால் நமக்கு ஞாபக மறதி பிரச்சினை ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே ஞாபக மறதியை அதிகரிக்கும் இந்த உணவுகளை தவிர்த்தல் நல்லது. இதனால் மூளையின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
சுத்தீகரிக்கப்பட்ட உணவு
சுத்தீகரிக்கப்பட்ட உணவுகளான பாஸ்தா, பிரெட் போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளாதது நல்லது. கார்போஹட்ரேட் உணவுகளை அதிகம் உட்கொள்ளும் பழக்கமும் ஆபத்து. அப்படி வெள்ளை அரிசி சாதம் குறைந்த அளவு எடுத்துக்கொண்டு காய்கறி, பழ வகைகளை அதிகமாக உட்கொள்ளலாம். இதனால் குழந்தையிலிருந்தே மூளை ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
சூரை மீன்
சூரை மீன் ஊட்டச்சத்து மிக்க உணவு என்றாலும் அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது ஞாபக மறதியை அதிகரிக்கும்.
சோயா சாஸ்
சோயா சாஸ் அதன் நன்மையை விட ஆபத்தையே அதிகம் கொண்டுள்ளது. அதில அதிக அளவிலான சோடியம் இருப்பது மூளையை நேரடியாக பாதிக்கும். இதனால் அதிக ரத்த அழுத்தம் உண்டாகும். அதன் விளைவாக ஞாபக மறதி அதிகரிக்கும்.
குளிர்பானம்
சர்க்கரை அதிகம் கொண்ட கார்போஹைட்ரேட் பானங்கள் எதுவானாலும் அது மூளைக்கு ஆபத்துதான். சர்க்கரை அதிகமாக சேர்க்கப்படும் எந்த உணவையும் தவிர்ப்பது நலம் பெயர்க்கும்.