இந்த நோய் உள்ளவர்கள் கட்டாயமாக பீட்ரூட் ஜூஸ் குடிக்கவே கூடாது! ஏன் தெரியுமா?
உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள எதை செய்ய வேண்டும் என்பது பலருக்கு புரிவதில்லை. அந்த வகையில் பலர் பீட்ரூட் ஜூஸ் செய்து தினமும் குடிப்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று தினமும் விடாமல் குடித்து வருகின்றனர்.
ஆனால் அதிகமாக எடுத்து கொள்ளும் போது எல்லாம் ஆபத்தே. சரி வாங்க பீட்ரூட் ஜூஸை யாரெல்லாம் குடிக்கக்கூடாது என்பது குறித்து தெளிவாக பார்க்கலாம்..
- சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. பீட்ரூட்டில் உள்ள பீட்டைன் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்துவிடும். பீட்ரூட்டில் உள்ள பீட்டைன் தீங்கு விளைவிக்கக்கூடியவை.
- அதுபோல கர்ப்பமாக இருப்பவர்கள் பிரசவம் முடியும் வரை பீட்ரூட் ஜூஸை குடிக்காமல் இருப்பதே நல்லது. பீட்ரூட் ஜூஸை ஒருவர் அளவுக்கு அதிகமாக குடித்தால் வயிற்றுப் போக்கு ஏற்படும். எனவே அளவாக குடித்து நன்மைப் பெறுங்கள்.
- கல்லீரல் பிரச்சனைகள் இருந்தால் பீட்ரூட் ஜூஸை அதிகமாக குடிக்காதீர்கள். அளவுக்கு அதிகமாக பீட்ரூட் ஜூஸை குடிப்பதால் உடல் அரிப்பு ஏற்படும். பீட்ரூட் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
- பீட்ரூட் ஜூஸ் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. ஆனால் குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஆபத்தானது.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் கேரட்
இஞ்சி
தண்ணீர்
எலுமிச்சை சாறு
செய்முறை:-
கேரட் மற்றும் பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். அதனுடன் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு, தண்ணீர் கலந்து ஜூஸ் பதத்துக்கு தயார் செய்து கொள்ளவும். பின்பு வடிகட்டி பருகலாம். காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது. விரும்பினால் சிறிதளவு மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம்.