அசைவம் சாப்பிட்ட பிறகு மறந்து கூட இதை செஞ்சிடாதிங்க! எச்சரிக்கை தகவல்
வாரம் ஒரு முறையாவது அசைவம் சாப்பிடவில்லை என்றால் அந்த வாரம் முழுமையடையாது. அதுவும் குறிப்பாக ஞாயிற்று கிழமை என்றால் அசைவம் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.
அசைவம் என்றாலே வழக்கத்திற்கு மாறாக எடுத்து கொள்ளும் அளவை விட கூடுதலாக எடுத்து கொள்வோம். சைவ உணவை விட அசைவ உணவு உண்ட பிறகு செரிமானம் நடக்க சிறிது தாமதமாகும்.
இதனால் சிலர் சாப்பிட்ட உணவு செரிப்பதற்காக சோடா போன்ற பானங்களை எடுத்து கொள்வார்கள். அசைவம் எடுத்து கொண்ட பிறகு சில உணவுகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
தவிர்க்க வேண்டியவை:-
அசைவ உணவு எடுத்து கொண்ட பிறகு நல்ல குளிர்ச்சியாக ஐஸ் கிரீம் சாப்பிட வேண்டும் என தோன்றும். இது மிகவும் தவறான உணவு பழக்கம். பொதுவாக உணவை எடுத்து கொண்ட பிறகு செரிமான உறுப்புக்கள் அமிலங்களை சுரக்கும்.
இந்த நேரத்தில் குளிச்சியாக எடுத்து கொள்வது செரிமானத்தை தாமதப்படுத்தும். அதனால் அசைவ உணவு எடுத்து கொண்ட பிறகு ஐஸ் கிரீம் சாப்பிட வேண்டாம்.
அதுபோல அசைவம் சாப்பிட்ட பிறகு வேகமாக நடக்க கூடாது. சாப்பிட்டவை செரிப்பதற்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் மயக்கம், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புண்டு.
சீக்கிரம் செரிமானம் நடக்க வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கலாம். அசைவ உணவு எடுத்து கொண்ட பிறகு ஒரு 30 நிமிடங்கள் கழித்து 1கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரை மெதுவாக குடிப்பது நல்லது.
சோடா,
கூல் டிரிங்ஸ், பீடா போன்றவை செரிமானத்திற்கு உதவி செய்தலும் அது பின் விளைவுகளை உணடாக்க வாய்ப்புள்ளது. அதனால் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருளை கொண்டு பானம் தயாரித்து பருகுவது நல்லது.