இந்த ஸ்மார்ட்போன்கள் எல்லாம் இனி இந்தியாவில் கிடைக்காது! புகைப்படத்துடன் முழு விபரம்
உலகில் ஸ்மார்ட் போன்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போட்டியும் ஸ்மார்ட் போன் நிறுவனங்களுக்கிடையே அதிகரித்து வருகிறது.
சீனா ஸ்மார்ட்போன்களான Xiaomi, Realme, OnePlus மற்றும் இன்னும் சில போன்கள் இந்திய சந்தைக்குள் நுழைந்ததில் இருந்து, ஒரு சில ஸ்மார்ட்போன்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.
குறிப்பாக, Micromax, LeEco, LG மற்றும் இன்னும் சில பிராண்டுகள் காணமல் போய்விட்டன, தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் சீனா பிராண்டுகளின் வருகையால் விழுங்கப்பட்டுவிட்டன என்றே சொல்லலாம். அந்த வகையில் இனி இந்தியாவில் கிடைக்காது என்று கூறப்படும் சில ஸ்மார்ட்போன் விவரங்களை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.
YU
மைக்ரோமேக்ஸின் துணை பிராண்ட் YU சியோமியைப் இந்திய சந்தையில் நுழைந்தது. ஆனால் சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் அடுத்தடுத்த வருகையால் நிலைத்து நின்று சமாளிக்க முடியவில்லை.
Alcatel
இந்த ஸ்மார்ட்போன் வருகையைப் பற்றி பல இந்தியர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் இது அந்தளவிற்கு மக்களை ஈர்க்கவில்லை, இதன் காரணமாக இது சில காலம் கூட நிலைத்திருக்கவில்லை.
Spice smartphones
பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் இது ஒரு சிறந்த போனாக இருந்த போதும், மற்ற பிராண்டுகளால் தொடர் வருகையால், காலப் போக்கில் இது வெளியில் தெரியாமல் போய்விட்டது.
HTC
இந்த சீனா ஸ்மார்ட் போன்களின் வருகையால், அதிகம் பாதிக்கப்பட்ட HTC என்று கூறலாம், இந்த நிறுவனத்தின் மூடலுக்கே அது தான் வழி வகுத்தது. கடந்த 2019 ஆம் ஆண்டில் மீண்டும் வர முயற்சித்த போதும், அவர்களால் நிலைத்து நிற்க முடியவில்லை.
LG
இந்த ஆண்டில் இந்த நிறுவனம், தன்னுடைய மொபைல் போன் வணிகத்தை மூடியுள்ளது. இருப்பினும், இதற்கு முன் இந்த நிறுவனத்தால் வெளிவந்த ஸ்மார்ட் போன்களுக்கு தேவையான மென்பொருள் தொடர்ந்து வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.