சாப்பிடும் போது இந்த தவறுகளை செய்யவே கூடாது! ஏன் தெரியுமா?
Food
Health tips
Eating style
By Logeswari
மனிதன் உயிர் வாழ இரண்டு முக்கிய தேவைகள் நீர் மற்றும் உணவு. இவற்றில் ஒன்று இல்லையென்றாலும் நம்மால் உயிர் வாழ முடியாது. உணவு உண்பது மூலமாக மட்டும் உடலுக்கு ஆரோக்கியம் கிடைத்து விடாது.
நாம் அந்த உணவை எப்படி சாப்பிடுகிறோம் என்பதையும் பொறுத்தது. நாம் முன்னோர்கள் எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்து சொல்லி இருப்பது மூடநம்பிக்கையாக இருந்தாலும் அதில் பல அறிவியல் சார்ந்த நன்மைகளும் உள்ளது.
சாப்பிடும் போது மேற்கொள்ளக்கூடாத சில பழக்கவழக்கங்களை குறித்து பார்க்கலாம்.
- உணவு உண்ணும் போது டிவி அல்லது மொபைல் போன் பார்ப்பதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதால் உண்ணும் உணவில் கவனம் செலுத்த முடியாமலும் வயிற்றுக்குள் கிருமிகள் செல்லவும் வாய்ப்புண்டு.
- நின்று கொண்டோ அல்லது நடந்து கொண்டோ சாப்பிடும் பழக்கத்தை கைவிட வேண்டும். இதனால் சாப்பிட்ட உணவு உடனே செரிமானம் ஆகிவிடுவதால் அடிக்கடி பசி உணர்வை தூண்டும். இதன் விளைவாக அதிகமாக உண்பதால் உடல் எடை அதிகரிக்கும்.
- முக்கியமாக சாப்பிடும் போது கைகளை தரையில் ஊன்றி சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் உண்ணும் உணவு உடலில் ஒட்டாது என்று கூறுவார்கள். அவ்வாறு சாப்பிடுவதால் உணவு முடியாத அளவிற்கு வயிறு சுருங்கி விடும் என்று கூறுவார்கள்.
- நம் முன்னோர்கள் தரையில் அமர்ந்து கால்களை மடக்கி உட்கொள்வதே நல்லது என்று கூறுவார்கள். அப்போது தான் நாம் சாப்பிடும் உணவு சரியாக இரைப்பையை அடைந்து செரிமானமாகும்.
-
சாப்பிடும் போது தண்ணீரை அதிகம் குடிக்கக்கூடாது என்று கூறுவார்கள். தேவைப்பட்டால் தாகத்திற்கு சிறிது குடிக்கலாம். அதிகம் குடித்தால் உணவை செரிக்க உதவும் அமிலத்தின் திறன் குறைந்து விடுகின்றது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US