உங்க ஸ்கூட்டர் அதிக Mileage தர வேண்டுமா?
உங்களது ஸ்கூட்டர் சராசரியைவிட குறைவான Mileage கொடுத்தால் நீங்கள் இந்த விடயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
பொதுவாக ஸ்கூட்டரும், அதன் Mileage-ம் பைக் ஓட்டுபவர்களுக்கு இன்றியமையாதது ஆகும்.
தினமும் ஸ்கூட்டர் ஓட்டுபவர்கள் சிறந்த Mileage கொடுக்கும் வாகனத்தை தேர்வு செய்கிறார்கள்.
அதே போல நல்ல Mileage தரும் வாகனமான ஸ்கூட்டி, திடீரென குறைவான Mileage கொடுக்கவும் வாய்ப்புள்ளது. அதனை நாம் சரி செய்தாக வேண்டும்.
* Heavy Gear Shifting
முதல் விடயமாக நாம் Heavy Gear Shiftingகை தவிர்த்தாலே பைக் Mileage -யை அதிகரிக்க முடியும். கியரை மாற்றும் போது வேகமாக அல்லது அழுத்தமாக மேற்கொண்டால் சேதமாக வாய்ப்புள்ளது. கியர்களை சீராகவும், சரியான நேரத்திலும் மாற்றினால் பைக்கின் எரிபொருள் செயல்திறனை மேம்படுத்த முடியும். அதே போல அதிகமாக கியரை மாற்ற கூடாது.
* Bike Service
உங்களது பைக்கை அதிகமாக சர்வீஸ் செய்வதன் மூலம் Mileage -யை அதிகரிக்க முடியும். அப்படி செய்தால் உங்களது பைக்கின் எஞ்சின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஸ்கூட்டரின் ஆயுளையும் அதிகரிக்கிறது.
* ஓட்டுநர் பயிற்சிகள்
உங்களது பைக்கை ஓட்டும் போது சிறந்த பயிற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். பைக்கை இயக்கும் போது சீராக ஒரே வேகத்தில் இயக்க வேண்டும். திடீரென பைக்கை வேகமாகவும், Break பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
* Engine Oil
உங்களது பைக்கின் Engine Oil -யை மாற்றினால் சிறந்த Mileage கொடுக்கும். அப்படி மாற்றும்போது பைக்கின் மற்ற பாகங்களின் மென்மையை தக்க வைக்கிறது. அதே போல ஒரு வருடத்திற்கு மூன்று முறையாவது என்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும்.
* சூரிய ஒளி
உங்களது பைக்கை அதிகரிக்க சூரிய ஒளியில் நிறுத்த வேண்டாம். சூரிய ஒளி பைக்கின் எரிபொருளை எரிக்கச் செய்வதால் Mileage -யை பாதிப்படைய செய்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |