சுவிட்சர்லாந்தில் அதிக ஊதியம் பெறுவது இவர்கள்தானாம்
சுவிட்சர்லாந்தில், சுவிஸ் குடிமக்களைவிட சில வெளிநாட்டவர்கள் அதிக ஊதியம் பெறுவதாக சுவிஸ் பெடரல் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் அதிக ஊதியம் பெறும் வெளிநாட்டவர்கள்
சுவிட்சர்லாந்தில், மேலாளர் மட்டத்தில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு, சுவிஸ் குடிமக்களை விட அதிக ஊதியம் வழங்கப்படுகிறதாம்.
இத்தகைய பணி செய்யும் சுவிஸ் நாட்டவர்களுக்கு சராசரியாக 129,100 சுவிஸ் ஃப்ராங்குகள் ஊதியம் வழங்கப்படும் நிலையில், அதே பணி செய்யும் வெளிநாட்டவர்களுக்கு சராசரியாக 130,000 சுவிஸ் ஃப்ராங்குகள் ஊதியம் வழங்கப்படுவதாக பெடரல் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு தெரிவித்துள்ளது.
அது மட்டுமின்றி, பகுதி நேரப் பணி செய்வோருக்கு அதிக ஊதியம் வழங்கப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
சில துறைகளில், பணியாளர் பற்றாக்குறை நிலவுவதே, சுவிஸ் குடிமக்களைவிட வெளிநாட்டவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட காரணம் என்கிறது பெடரல் புள்ளியியல் அலுவலகம்.
இந்தப் பணிகளைப் பொருத்தவரை, அவற்றைச் செய்பவர்கள் எந்த நாட்டவர்கள் என்பதைவிட, அந்தப் பணிக்கு பணியாளர்கள் கிடைக்காததே, அந்தப் பணிகளில் கூடுதல் ஊதியம் வழங்கப்படுவதற்குக் காரணம் என்கிறார் மனிதவளத்துறை நிபுணர் ஒருவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |