ஐரோப்பாவிலேயே அதிக மின்கட்டணம் செலுத்துபவர்கள் இவர்கள்தான்
ஐரோப்பாவிலேயே அதிக மின்கட்டணம் செலுத்துபவர்கள் ஜேர்மன் நாட்டவர்கள்தான் என தகவல் வெளியாகியுள்ளது.
2019ஆம் ஆண்டில் ஜேர்மன் நாட்டவர்கள் ஐரோப்பாவிலேயே அதிக மின்கட்டணம் செலுத்தியது தெரியவந்த நிலையில், 2020இலும் அவர்கள்தான் அதிக மின்கட்டணம் செலுத்தியது தெரியவந்துள்ளது. பெடரல் புள்ளி விவர அலுவலகத்தின் புள்ளிவிவரங்களின்படி, ஐரோப்பாவின் சராசரி மின் கட்டணம் குறைந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளிலோ மின் கட்டணம் 0.51 செண்ட்கள் குறைந்து 21.26செண்ட்களானது. ஆனால், ஜேர்மனியைப் பொருத்தவரை, மின்கட்டணம் மற்ற ஐரோப்பிய நாடுகளை விட அதிகமாக உள்ளது.
அத்துடன், பெரிய வீடுகளில் வசிப்போர், அதாவது அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கும் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
3,500 கிலோவாட் மணி நேரம் மின்சாரம் பயன்படுத்துவோர், சராசரியாக ஒரு கிலோவாட்
மணி நேரத்துக்கு 30.43 செண்ட்கள் கட்டணம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்கள்.
இது கடந்த ஆண்டில் 29.83 செண்ட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.