சுவிட்சர்லாந்தில் மீண்டும் தலைதூக்கும் பழைய மோசடி ஒன்று
சுவிட்சர்லாந்தில், பழைய மோசடி ஒன்று மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், அதிகாரிகள் அது குறித்து மக்களை எச்சரித்துள்ளார்கள்.
மீண்டும் தலைதூக்கும் மோசடி
சுவிட்சர்லாந்தில், குறிப்பாக, வடமேற்கு சுவிட்சர்லாந்தில், மின்வாரியப் பணியாளர்கள் என தங்களை அறிமுகம் செய்துகொண்டு மீற்றரை பரிசோதிக்கவேண்டும் என்று கூறி சிலர் வீடுகளுக்குள் நுழைகிறார்களாம்.

மக்கள் அவர்களை மின்வாரியப் பணியாளர்கள் என நம்பி வீட்டுக்குள் அனுமதிக்க, அந்த நபர்கள் விலையுயர்ந்த பொருட்களை திருடிச் சென்றுவிடுகிறார்களாம்.
இந்த விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து, மின்வாரிய அதிகாரிகள், தங்கள் பணியாளர்கள் எப்போதுமே தெளிவான அடையாள அட்டை அணிந்திருப்பார்கள் என்றும், பணம் கேட்க மாட்டார்கள் என்றும், மக்களுக்கு தொல்லை கொடுக்கமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.
அத்துடன், பொலிசாரும், முன் நடைபெற்ற இதுபோன்ற மோசடிகள் மீண்டும் தலைதூக்குவது தெரியவந்துள்ளதாகவும், அப்படி யாராவது மின்வாரியப் பணியாளர்கள் என்று கூறி கதவைத் தட்டினால், சந்தேகம் ஏற்பட்டால் கதவைத் திறக்கவேண்டாம் என்றும், பொலிசாரை அழைக்குமாறும் மக்களைக்கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |