சுவிட்சர்லாந்தில் செல்வந்தர்களின் வீடுகளைக் குறிவைத்துக் கொள்ளை
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஏரியை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் வாழும் செல்வந்தர்களைக் குறிவைத்து நிகழ்த்தப்படும் கொள்ளைச் சம்பவங்கள் அச்சத்தை உருவாக்கியுள்ளன.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஏரியை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில், வங்கியாளர்கள், பெரு வர்த்தகர்கள் முதலான பெரும் செல்வந்தர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.
இந்நிலையில், அப்பகுதியில் செல்வந்தர்களைக் குறிவைத்து பயங்கர கொள்ளைச் சம்பவங்கள் நடந்துவருகின்றன.
செல்வந்தர்களின் வீடுகளைக் குறிவைத்துக் கொள்ளை
செல்வந்தர்களின் வீடுகளுக்குள் ஆயுதங்களுடன் நுழையும் கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் வீடுகளில் இருப்பவர்களை மிரட்டி, பணம், நகைகள் மற்றும் கைக்கடிகாரங்கள் முதலான விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் செல்கிறார்கள்.

தடுத்தால் அடி உதைதான். அத்துடன், ஒரு செல்வந்தர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள், அந்தக் குடும்பத்திலுள்ள ஒரு பதின்ம வயதுப் பிள்ளையையும் கடத்திச் சென்றுள்ளார்கள்.
பிரான்ஸ் எல்லை அருகே அந்தப் பிள்ளையை விடுவித்துள்ளது அந்தக் கொள்ளைக் கூட்டம்.
அதாவது, இந்தக் கொள்ளையர்கள், சுவிட்சர்லாந்தை ஒட்டியுள்ள பிரான்ஸ் பகுதிகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதாக நம்பப்படுகிறது.
ஆறு மாதங்களில் 40,000 புலம்பெயர்ந்தோர்: சுவிட்சர்லாந்திருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே ஜெனீவா ஏரி பகுதியில் இப்படி சுவிஸ் செல்வந்தர்களைக் குறிவைத்து 18 கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
பலர் பொலிசாரை நம்பாமல், தனியார் பாதுகாவலர்களை ஏற்பாடு செய்துவருகிறார்கள்.
விடயம் என்னவென்றால், சுவிட்சர்லாந்தில் ஜெனீவா ஏரி பகுதி, செல்வந்தர்களையும், பெரும் வர்த்தக நிறுவனங்களையும் ஈர்க்கும் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
ஆனால், இந்த கொள்ளைச் சம்பவங்கள் அந்த பகுதியின் புகழைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளன. ஆகவே, அதிகாரிகள் அந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |