உடல் வலுவிற்கு சத்தான தினை அரிசி லட்டு.., எப்படி செய்வது?
தினை என்பது உடலுக்கு ஆரோக்கியமான பாரம்பரிய சிறுதானியமாகும்.
இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
அந்தவகையில், சத்தான தினை அரிசியில் லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தினை அரிசி- 1 கப்
- வெல்லம்- 1 கப்
- தண்ணீர்- ½ கப்
- நெய்- 3 ஸ்பூன்
- முந்திரி- 5
- பாதாம்- 5
- பிஸ்தா- 5
- தேன்- 3 ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தினை அரிசி சேர்த்து 2 முறை நன்கு கழுவி 3 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை வடிகட்டி ஒரு துணியில் போட்டு அரை மணி நேரம் உலரவிடவும்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணல் வைத்து அதில் தினை அரிசியை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து வறுத்த அரிசியை நன்கு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இதனைதொடர்ந்து வாணலில் நெய் சேர்த்து அதில் நறுக்கிய முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
இறுதியாக ஒரு பாத்திரத்தில் வறுத்த நட்ஸ், அரைத்த மாவு, வெல்லக்கரைசல், ஏலக்காய் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து லட்டுவாக பிடித்தால் தினை அரிசி லட்டு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |