உடலிற்கு சத்தான தினை அரிசி இனிப்பு பொங்கல்.., எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு என்றால் பொங்கல்.
அந்தவகையில், சுசத்தான தினை அரிசி இனிப்பு பொங்கல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தினை அரிசி- 1 கப்
- வெல்லம்- 1½ கப்
- பாசிப்பருப்பு- ¼கப்
- முந்திரி- 10
- நெய்- தேவையான அளவு
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்துக் எடுத்துக்கொள்ளவும்.
பின் வெல்லத்தை சிறு துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு குக்கரில் ஊறவைத்து அரிசி மற்றும் பருப்பை சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில்விட்டு வேகவைத்த்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து அரிசி வெந்ததும் உடைத்து வைத்த வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறவும்.
பின்னர் ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து பொங்கலுடன் சேர்த்து கிளறவும்.
இறுதியாக பொங்கலுடன் தேவையான அளவு நெய், ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கினால் சுவையான தினை அரிசி பொங்கல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |