எந்த கிழமையில் என்ன பொருட்கள் வாங்கக்கூடாது
பொதுவாக இந்து மத சாஸ்திரப்படி சில பொருட்களை சில நேரங்களில் வாங்க கூடாது என்று சொல்லுவது உண்டு.அதற்கு பின்னால் பல காரணமும் இருக்கிறது.
நாம் ஏன் குறிப்பிட்ட தினங்களில் குறிப்பிட்ட சில பொருட்களை வாங்க கூடாது என்று சொல்கிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
1. திங்கட்கிழமை
திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாள். எனவே, இந்நாளில் தானியங்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.அது மட்டும் அல்லாமல் வண்ணங்கள், தூரிகைகள், இசைக்கருவிகள் போன்ற கலை சம்பந்தப்பட்ட பொருட்களையும், நகல் புத்தகங்கள், விளையாட்டு தொடர்பான பொருட்கள், வாகனங்கள், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை வாங்குவதையும் தவிர்ப்பது நன்மையை உண்டாகும் என்கிறார்கள்.
2. செவ்வாய்க்கிழமை
செவ்வாய்க்கிழமையில் பால், மரம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பொருட்களையும். உலோகங்கள் மற்றும் காலணிகளையும் தவிர்க்கவேண்டும்.
3. புதன்கிழமை
புதன்கிழமையில் வீடு, மனை, பத்திரம், அரிசி, மருந்து, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை தவிர்க்கவேண்டும்.
4. வியாழன்கிழமை
வியாழன் கிழமை குரு பகவானுக்கு உகந்த நாள். எனவே, இந்நாளில் கண்ணாடி பொருட்கள், பூஜை பொருட்கள், கூர்மையான பொருட்கள் போன்றவற்றை கட்டாயம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
5. வெள்ளிக்கிழமை
வெள்ளியன்று மசாலா பொருட்களை வாங்கவோ அல்லது அரைக்கவோ கூடாது. மேலும் இந்நாளில் கத்தி, கத்திரிக்கோல் போஇரும்பு சார்ந்த பொருட்களையும் வாங்க கூடாது
6. சனிக்கிழமை
சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாள். எனவே, இந்நாளில் உப்பு, அதிக இடையில பொருட்கள், வீடு, இரும்பு சம்பந்தமான பொருட்கள் போன்றவற்றை வாங்க கூடாது.
7. ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை இரும்பு மற்றும் இரும்பு சம்பந்தமான பொருட்களை ஒருபோதும் வாங்க கூடாது.