உங்கள் லேப்டாப்பை சேதமாக்கும் 4 விடயங்கள்! இப்படி பண்ணாதீங்க
லேப்டாப்பை சரியாக பராமரித்தால் தான் அதன் ஆயுட்காலம் அதிகரிக்கும், இதோடு பிரச்சனைகள் இல்லாமல் வேகமாக செயல்படும். லேப்டாப்பை எப்படி சரியாக கையாள்வது?
உங்கள் லேப்டாப்பை எல்லா நேரத்திலும் சார்ஜில் வைக்க வேண்டாம்.
சிலர் பல நேரங்களிலும் லேப்டாப்பை சார்ஜில் போட்டு வைத்திருப்பார்கள், முக்கியமாக கேம்கள் விளையாடும் போது பேட்டரி அதிகம் இழுக்கும். எப்போதும் சார்ஜருடன் லேப்டாப்பை தொடர்ந்து இணைந்திருக்கக் கூடாது. சார்ஜருடன் இணைந்திருப்பது உடனடியாகப் பாதிப்பை ஏற்படுத்தாது, ஆனால் நீண்ட கால பயன்பாட்டில் உள் கூறுகளை நிச்சயமாகப் பாதிக்கும்.
conovercompany
லேப்டாப்பை திறந்து மூடுவது
லேப்டாப்பை திறக்கும் போது ஒரு பக்கத்தில் இருந்து திறக்கக்கூடாது, நடுவில் கை வைத்து தான் திறக்க வேண்டும். ஒரு பக்க மூலையிலிருந்து திறப்பது ஒரு முனையில் அழுத்தத்தை அதிகரித்து லேப்டாப்பில் சிக்கலை ஏற்படுத்தி விடும்.
வயர்கள்
லேப்டாப்பில் இணைக்கப்படும் வயர்களை சரியாக கவனிக்க வேண்டும், ஏனெனில் சில நேரங்களில் நாற்காலிகள், டேபிளில் சிக்கி கொண்டால் அதை நாம் நகர்த்தும்போது சேதம் விளைவிக்கும்.
சாப்பிடும் போது லேப்டாப் உபயோகிக்க வேண்டாம்
எண்ணெய் போன்ற உணவுகளை தொட்டுவிட்டு லேப்டாப்பின் பேட் மற்றும் விசைப்பலகை மீது கை வைப்பதால் அதன் காரணமாக சாதனத்தின் உள்ளே எண்ணெய் செல்லும், பின்னர் இது பெரும் செலவு வைக்கும்.
Josh Goldman/CNET